தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் திரைப்படத்தை இயக்கிய என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு ‛அகிலன்' எனப் பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடிக்கின்றனர். துறைமுகத்தை மையமாக கொண்ட கதைக்களம் என்பதால் தூத்துக்குடியிலும், சென்னை காசிமேட்டிலும் படமாக்கி வந்தனர்.
இந்த படத்தில் போலீசாக சிராக் ஜானி நடிக்கிறார். இவர் ஏற்கனவே சூர்யா நடிப்பில் காப்பான் படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‛தமிழில் நான் போலீஸ் கேரக்டரில் நடிப்பது இதுவே முதல் முறை. சமீபத்தில் என்னுடைய குஜராத்தி படமான ஜி படத்தில் நான் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தேன். அதில் நான் கதாநாயகனாக நடித்திருந்தேன். ஆனால், அகிலன் படத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரம் என்பதால் வழக்கமான போலீஸ் கேரக்டர் அல்லாமல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன்,' என்றார்.