என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை |
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கி இருப்பவர் நெல்சன் திலீப்குமார். இவர் அடுத்தபடியாக ரஜினியின் 169 வது படத்தை இயக்க இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படி ஒரு மாஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் விஜய் டிவியின் தொகுப்பாளினியும், நெல்சனின் தோழியுமான திவ்யதர்ஷி கூறுகையில், ‛‛என்னால அழுகையை அடக்கவே முடியலடா நெல்சா. தலைவர் சிங்கம் மாதிரி இருக்காரு. என் தலைவா தேங்க்யூ சார் என்று சொல்லி அந்த டுவீட்டை ரஜினி மற்றும் நெல்சனுக்கும் டேக் செய்துள்ளார் டிடி. அதோடு வெறி பிஜிஎம் போங்கப்பா ரொம்ப ஹேப்பி என்று அனிருத்துக்கு பதிவிட்டு, ரஜினியின் 169 பட அறிவிப்பு கான வீடியோவை தான் பார்த்து மகிழும் ஒரு வீடியோவை ஷேர் செய்திருக்கிறார்.