ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜூன் தாஸ் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் கைதி. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது. இதன் கதை என்னுடையது என கேரளாவில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அதில் கைதி படத்தை பிறமொழிகளில் ரீ-மேக் செய்யவும், கைதி 2 உருவாக்கவும் தடை கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் ஏற்கனவே விதித்த இடைக்கால தடையை ரத்து செய்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து கைதி ரீ-மேக் மற்றும் கைதி 2 உருவாக்கத்திற்கான தடை விலகி உள்ளது.