போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், அட்ரங்கி ரே படங்களை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள படம் மாறன். இந்த படத்தில் தனுசுடன் மாளவிகா மோகனன், ஸ்ம்ருதி வெங்கட், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் பிப்ரவரி 25-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அஜித் நடித்துள்ள வலிமை படம் பிப்ரவரி 24ம் தேதி வெளியாவதால் தனுஷின் மாறன் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைக்க சத்யஜோதி பிலிம்ஸ் திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அஜித்தின் வலிமை படம் தியேட்டரில் வெளியாகிறது. தனுஷின் படமோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதனால் பிரச்னையில்லை என்றாலும் அஜித்தின் வலிமை படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாவதால் ஓடிடியில் மாறன் படத்திற்கான பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருக்கிறது. இதனால் வெளியீட்டு தேதி தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.