பாலிவுட்டில் பிஸி : மும்பையில் வீடு வாங்கினார் ராஷ்மிகா | படப்பிடிப்பில் விபத்து : ஷில்பா ஷெட்டி கால் எலும்பு முறிந்தது | நடிகர் சூர்யா மீதான வழக்கு ரத்து | இந்தியாவின் 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை நெட்பிளிக்ஸ் உடன் கொண்டாடுங்கள் | ஸ்பெயின் பறந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் மீனா : 40 நாட்களுக்கு பின் வெளி உலகத்திற்கு வந்தார் | லோகேஷ் கனகராஜை பாராட்டிய ரஜினி, விஜய் | விஜய் யேசுதாஸை இயக்கும் 10ம் வகுப்பு மாணவி | மீண்டும் ஐதராபாத்தில் அஜித் குமார் | சந்திரமுகி 2வில் வடிவேலுவின் கேரக்டர் விபரம் வெளியானது |
மெட்ரோ படத்தில் அறிமுமான சிரிஷ், அதன் பிறகு ராஜா ரங்குஸ்கி, பிளட் மணி ஆகிய படங்களில் நடித்தார். சிரிஷ் சினிமா தவிர்த்து சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். அவர் இப்போது தமிழ்நாட்டின் இரண்டு சிலம்பம் சாம்பியன்களுக்கு, சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்கான உதவிகளை செய்துள்ளார்.
இதுகுறித்து சிரிஷ் கூறியதாவது: 11 ஆம் வகுப்பு படிக்கும் நான்சி எஸ்தர் மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் அபிஷேக ராஜன் ஆகிய இந்த திறமையான குழந்தைகளைப் பற்றிய செய்தியை நண்பர் மூலம் அறிந்தேன். அவர்களின் திறமையையும் சாதனையையும் பார்த்த பிறகு உண்மையில் பிரமித்து போனேன். அவர்கள் பல மாவட்ட மற்றும் தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளனர்.
அவர்களிடம் திறமைகள் இருந்தபோதிலும், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நேபாளத்தில் நடக்கவிருந்த யூத் கேம்ஸ் சர்வதேச சாம்பியன்ஷிப்பில் அவர்களால் பங்கேற்க முடியவில்லை என்பது ஏமாற்றமளித்தது.
இந்தக் குழந்தைகள் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அவர்களின் பயண மற்றும் தங்கும் செலவுகளை நான் பார்த்துக்கொள்ள முடிவு செய்தேன். எதிர்காலத்திலும் திறமையான நபர்களை ஊக்குவித்து தொடர்ந்து இது போன்ற உதவிகளை செய்வேன். என்கிறார்.