காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
நடிகர் சிம்பு இப்போது ஆளே மாறிவிட்டார். மாநாடு படத்திற்கு பிறகு அவரிடம் நிறைய மாற்றங்கள் தெரிகிறது. மாநாடு படத்தை குறித்த காலகட்டத்தில் முடித்து கொடுத்ததோடு, தற்போது நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்திலும் சிரத்தையோடு நடித்து வருகிறார். இது தவிர பத்து தல, கொரோனா குமாரு படங்களில் நடித்து வருகிறார். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இதற்காக வீட்டில் தீவிரமாக பெண் தேடி வருகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 105 கிலோ வரை எடை கூடியிருந்த சிம்பு இப்போது 72 கிலோ எடையில் இருக்கிறார். எடையை எப்படி குறைத்தார் என்பது குறித்த 13 நிமிட வீடியோ ஒன்றை அட்மேன் என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார். அதில் எடையை குறைக்கும் முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரையிலான அவரது நடவடிக்கைகள் காட்சியாக இடம் பெற்றுள்ளது. நீச்சல், குத்துச் சண்டை, கடுமையான உடற்பயிற்சி, அதிகாலை ஜாக்கிங், நடனம், யோகா என கடுமையாக தன்னை வருத்திக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.