‛மயோன் 2' உருவாகிறது | யானை படம் : பிரியா பவானி சங்கர் நம்பிக்கை | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கிர்த்தி ஷெட்டி | திருமணம் குறித்து எந்த ஐடியாவும் இல்லை : ஸ்ருதிஹாசன் | மதுரைக்கார இளைஞனாக மாறும் ஆர்யா | கமலுக்கு கோல்டன் விசா | பிரித்விராஜ் ஒரு கேரள கமல் : விவேக் ஓபராய் புகழாரம் | பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை நாடும் கேரள அரசு | இயக்குனர் சங்கத்திற்காக ஒன்றிணையும் ஜீத்து ஜோசப் - பிரித்விராஜ் | மோகன்லாலுக்கு வில்லனாக மாறும் ஹரீஷ் பெராடி |
5 முறை தேசிய விருது பெற்ற நடிகை ஷபானா ஆஸ்மி. 1974 முதல் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அவர் வெளியிட்டுள்ள பதிவில்: கோவிட் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். எனது நெருங்கி நட்பு வட்டாரத்தில் இருப்பவர்கள் பரிசோனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த பதிவுடன் அவர் தனது கணவர் ஜாவீத் அக்தருடன் இருக்கும் படத்தை வெளியிட்டிருந்தார் இதனை குறிப்பிட்டுள்ள தயாரிப்பாளர் போனி கபூர் "எனது நண்பர் ஜாவீத்திடமிருந்து விலகி இருங்கள்" என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். பாலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் ஷபானா ஆஸ்மி குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஷபானா ஆஸ்மி தற்போது ஆலியா பட் மற்றும் ரன்வீர் சிங்குடன் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தில் நடித்து வருகிறார்.