அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு |
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷன். கிரிஷ், டான், வார் படங்களின் மூலம் புகழ்பெற்றவர். 2000மாவது ஆண்டில் பேஷன் டிசைனர் சூசன் கானை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். 14 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து விட்டனர். அதன்பிறகு தனிமையில் வாழ்ந்து வந்தார் ஹிருத்திக். இந்த நிலையில் மும்பையில் இருக்கும் உணவகம் ஒன்றில் இருந்து ஒரு இளம் பெண்ணின் கையை பிடித்தபடி ரித்திக் வெளியே வந்து காரில் ஏறியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது.
அந்த பெண் தன் முகத்தை மூடியபடி இருந்தார். என்றாலும் மீடியாக்களின் துப்பறவுபடி அந்த பெண் நடிகை சபா ஆசாத் என்று கண்டுபிடிக்கப்பட்டது. சபா ஆசாத், தில் கபடி படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதுவரை 5 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு அவர் நடித்த பீல்ஸ் லைக் இஷ்க் படம் வெளியானது. இருவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.