வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் |
பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், ரஜினிகாந்த்துடன் பேட்ட படத்தில் வில்லனாக நடிதிருந்தார். இவரது தந்தை நவாபுதீன் சித்திக் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்தார். தந்தையின் மீது மிகுந்த பாசம் கொண்ட நவாசுதீன் சித்திக் அவரது பெயரில் மாளிகை ஒன்றை எழுப்ப விரும்பினார்.
உத்தர பிரதேச மாநிலம் புதானாவில் உள்ள தனது தந்தை வாழ்ந்த பாரம்பரிய வீட்டை போலவே பிரமாண்ட மாளிகை ஒன்றை கட்டினார். அவரது நேரடி பார்வையிலும் அவரது ஆலோசனைப்படியும் இந்த மாளிகை உருவானது. கடந்த 5 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த இந்த மாளிகை இப்போது திறக்கப்பட்டு விட்டது.
இதற்கு 'நவாப் பங்களா' என்ற பெயர் சூட்டி உள்ளார். தனது புதிய பங்களாவின் படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நவாசுதீன் "ஒரு நல்ல நடிகர் எப்போதும் கெட்ட மனிதனாக இருக்க முடியாது, ஏனென்றால் அவனது உள்ளதில் உள்ள தூய்மைதான் நல்ல நடிப்பை வெளிப்படுத்தும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.