என் குழந்தைக்கு வயது 33 : ‛தேவர் மகன்' பற்றி கமல் பதிவு | ஐந்து மொழிகளில் வெளியான 'பாகுபலி தி எபிக் டிரைலர்' | 'டியூட்' படத்தை அடுத்து 'பைசன்' வெற்றி விழா | அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள் | பாலிவுட் என்று அழைக்காதீர்கள் : ஜெயா பச்சன் காட்டம் | சர்ச்சையை ஏற்படுத்திய 'இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர் ஸ்டார்' | ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் |

அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஷால், டிம்பிள் ஹயாத்தி மற்றும் பலர் நடிக்கும் படம் 'வீரமே வாகை சூடும்'. இப்படம் நாளை பிப்ரவரி 4ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் தியேட்டர்களில் வெளியாகிறது.
தமிழில் நவம்பர் 25ல் வெளிவந்த 'மாநாடு' படத்திற்குப் பிறகு முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் எதுவும் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வரவில்லை. டிசம்பர் 3ம் தேதி வெளிவந்த ஜிவி பிரகாஷ்குமார் நடித்த 'பேச்சுலர்' படம் ஓரளவிற்கு வெற்றியைப் பெற்றது.
கடந்த வருட டிசம்பர் மாதத்தில் வெளிவந்த மற்ற படங்களுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக ரசிகர்கள் வரவில்லை. பல படங்கள் ஓரிரு நாட்கள், ஓரிரு காட்சிகளில் தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டன.
இந்த வருடம் ஜனவரி மாத ஆரம்பமே கொரோனா பாதிப்பால் 50 சதவீத இருக்கை அனுமதி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. ஜனவரி மாதத்தில் வெளிவந்த படங்களுக்கும் மக்கள் தியேட்டர்கள் பக்கமே வரவில்லை. மிக மிகக் குறைவாகவே வந்தார்கள். அதனால், பல தியேட்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
விஷால் நடித்துள்ள 'வீரமே வாகை சூடும்' படம் நாளை வெளிவருவதால் கடந்த இரண்டு மாத கால சோதனையை இந்தப் படம் மாற்றும் என தியேட்டர்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள். படத்தின் டீசர், டிரைலர் அதற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்துடன் 'யாரோ, சாயம்' ஆகிய படங்களும் தியேட்டர்களில் வெளியாகின்றன. ஓடிடியில் 'பன்றிக்கு நன்றி சொல்லி' படம் வெளியாகிறது.




