அடுத்தடுத்து வெளிவர உள்ள பெரிய படங்கள் | தலைநகரம் 2 படப்பிடிப்பு நிறைவு | ஹரிஷ் கல்யாணின் டீசல் | பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ் மருத்துவமனையில் அனுமதி | சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் அர்ச்சனா | சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் ஜூலி | இது சூப்பர் ஜோடி : திரவியும் - ஸ்வாதி ஜோடிக்கு ரசிகர்கள் கமெண்ட் | சிம்பு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகா படுகோனே - நயன்தாரா | மீனாவின் கணவர் மரணம் ; யாரையும் பயமுறுத்த வேண்டாம் : குஷ்பு |
வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களில் நடித்து வரும் சிம்பு நாளை தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இந்நிலையில் சிம்புவின் நண்பரான மகத் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், சிம்புவுக்கு நாளை துபாய் அரசு கோல்டன் விசா வழங்கி இருக்கிறது. அதனால் தற்போது அவர் துபாய் சென்றிருப்பதோடு தனது பிறந்த நாளையும் அங்குதான் கொண்டாடப் போகிறார் என்று ஒரு தகவல் வெளியிட்டு உள்ளார். இப்படி ஒரு செய்தி வெளியானதை அடுத்து சிம்புவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் துபாய் அரசின் இந்த கோல்டன் விசாவை இந்திய சினிமாவில் இருந்து மோகன்லால், மம்மூட்டி, சஞ்சய் தத், பார்த்திபன், துல்கர் சல்மான், திரிஷா, அமலா பால், மீரா ஜாஸ்மின், உள்பட பலர் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.