ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
பீஸ்ட் படத்தை அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் இந்தப் புதிய படம் தமிழில் அவர் நடித்த பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் படங்கள் பாணியில் ஆக்சன் கலந்த சென்டிமெண்ட் கதையில் உருவாகிறது. மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிப்பதாக முதலில் செய்தி வெளியானபோது ஒரு பேட்டியில் அவர் அதை மறுத்து விட்டார்.
இந்தநிலையில் கியாரா அத்வானி, ராஷ்மிகா மந்தனா, ராசி கண்ணா போன்ற மூன்று நடிகைகளில் எந்த நடிகையை விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்கலாம் என்ற பரிசீலனை தற்போது நடைபெற்று வருவதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி வெளியிட அப்படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது.