மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார். இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரித்திருக்கிறார். பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிப்ரவரி 10ம் தேதி முதல் அமேசான் ஓடிடியில் வெளியிடப்படுகிறது. தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் 'மகான்' வெளியாகிறது. கன்னடத்தில் இந்த படத்திற்கு 'மகா புருஷா' என பெயரிடப்பட்டிருக்கிறது.
மகான் படத்தின் கதை இதுதான்: தனக்கென சில இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு தனிமனித சுதந்திரத்துடன் லட்சிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் மகான் எனப்படுகிற விக்ரம். ஒரு கட்டத்தில் அவர் தனது குடும்பத்தை விட்டு அவர் வெளியேற வேண்டிய சூழல் உருவாகிறது.
கோடீஸ்வரராக வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக உழைக்கிறார். கோடீஸ்வரனாக வேண்டும் என்ற அவரது கனவு நனவான பிறகு, தன்னுடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள வாரிசு இல்லையே.. என்ற இழப்பை உணர்கிறார். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நல்லதொரு தந்தையாக வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடர்ந்தாரா... என்பதுதான் படத்தின் கதை.
இதில் விக்ரமின் மகனாக துருவ் விக்ரம் நடித்துள்ளார். இருவருக்கும் இடையிலான மோதலும், நேசமும்தான் படத்தின் மைய இழை.