கோவையில் அதிர போகும் இளையராஜாவின் இன்னிசை மழை | மலையாள திருநங்கை நடிகை மர்ம மரணம் | அதிகாலை காட்சிகளுக்கு வருகிறது ஆப்பு : அரசிடம் விளக்கம் கேட்கிறது நீதிமன்றம் | தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்த நடிகர் விஜய்! | கமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது | அம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா? விஜயலட்சுமி காட்டமான பதில் | ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து - போனி கபூர் | ‛ரஜினி 169' எப்போது ஆரம்பம் | விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | சித்தார்த் நடிக்கும் புதிய ஹிந்தி வெப் தொடர் |
ஸ்ருதிஹாசன் தமிழில் கடைசியாக எஸ்பி ஜனநாதனின் லாபம் படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவரது நடிப்பு கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. அவர் கையில் இப்போது தமிழ் படம் எதுவும் இல்லை. என்றாலும் இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் அவரது 107வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இதற்கிடையில் அவர் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்து வருகிறார். கே ஜி எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இதனை இயக்குகிறார். ஸ்ருதியின் பிறந்த நாளையொட்டி இயக்குனர் பிரசாந்த் நீல் அவரது தோற்றத்தையும் கேரக்டர் பெயர் ஆத்யா என்றும் வெளியிட்டிருக்கிறார்.
இந்த படம் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகிறது. தமிழ், மலையாளம், இந்தியில் டப் செய்யப்படுகிறது. . புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்.