ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
தன் மகள் ஐஸ்வர்யாவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியிருக்கும் அர்ஜுன். தன்னை இந்திக்கு கொடுக்கப்போகிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் நடித்த அர்ஜுன் இந்திப் படங்களின் பக்கம் சென்றதே இல்லை. பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்தின் மூலம் இந்திக்குள் நுழைந்து விடலாம் என்று கணக்குப்போட்டார். அந்த கணக்கு தப்பாகிவிட்டது. அந்தப் படம் சில பிரச்னைகள் காரணமாக தமிழில் மட்டும் வெளிவந்தது. இந்தியில் வெளியாகவில்லை. இந்தியில் வெளியாகி இருந்தால் அர்ஜுனுக்கும், அதில் ஹீரோயினாக நடித்த காஜல் அகர்வாலுக்கும் பெரிய பிரேக் கிடைத்திருக்கும். எப்படியாவது இந்தியில் நடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த அர்ஜுன் தானே ஒரு படத்தை இந்தியில் தயாரித்து நடிப்பது என்ற முடிவு செய்தார். தானே இயக்குவது என்றும் களத்தில் இறங்கினார். படத்துக்கு "சி.எம்" என்று பெயர் வைத்துள்ளார். சி.எம். என்றால் காமன் மேன் என்ற பொருளாம். உன்னைப்போல் ஒருவன் மாதிரி சமூக பொறுப்புள்ள கதையாம். ஆனால் அர்ஜுன் பிராண்ட் ஆக்ஷன் பட்டைய கிளப்புமாம்.