நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், அடுத்தபடியாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் தனது 66வது படத்தில் நடிக்கப் போகிறார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மகள் விஜய்யின் மகளாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜு, விஜய் 66வது படம் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், இயக்குனர் வம்சி கூறிய கதை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதையடுத்து விஜய் இந்த கதையை கேட்ட பிறகு இதே போன்ற ஒரு கதையை நான் கேட்டு 20 வருடங்கள் ஆகிவிட்டது என்று ஒரு உற்சாகமான பதில் கொடுத்தார். ஒரு மிகப் பெரிய நடிகரே இப்படி கூறியதை கேட்டு எனக்கு இந்த படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டது. அதோடு ஏற்கனவே நான் நடித்து வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை படங்களைப் போன்று இதுவும் ஒரு நல்ல குடும்பப் பாங்கான கதையாக உள்ளது என்று விஜய் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் என்று கூறியுள்ளார் தில் ராஜு.
விஜய் 66 ஆவது படத்தை மார்ச் மாதத்தில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவேளை கொரோனா காரணங்களால் படப்பிடிப்பு தாமதம் ஆனால் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார் .