என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

இயக்குனர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரனை வைத்து இயக்கி வரும் படத்திற்கு ஆர்சி - 15 என தற்காலிகமாக பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், ரகுமான் என பலர் நடிக்க தமன் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது மூன்றாவது கட்ட படப்பிடிப்பை நடத்த தயாராகி வருகிறார் இயக்குனர் ஷங்கர்.
அரசியல் கலந்த திரில்லர் கதையில் உருவாகிவரும் இந்த படம் ரூ. 170 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை ரூபாய் 200 கோடிக்கு ஜீ நெட்வொர்க் நிறுவனம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், ஷங்கர் ராம் சரண் இணைந்துள்ள இந்தப் படத்தை 2023ம் ஆண்டு சங்கராந்திக்கு வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் தில் ராஜு திட்டமிட்டிருப்பதாக தற்போது புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அப்படி என்றால் அடுத்தாண்டு பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வருகிறது.