2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

நாகேஷ் குகுனூர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தெலுங்குப் படம் 'குட் லக் சகி'. இப்படத்தை தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டு டிரைலர்களையும் வெளியிட்டனர்.
2020 சுதந்திர தினத்தன்று இப்படத்தின் டீசர் தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்தது. தெலுங்கில் 13 மில்லியன், தமிழில் 4 மில்லியன், மலையாளத்தில் 1 மில்லியன் பார்வைகளைப் பெற்றது.
சாதாரண கிராமத்துப் பெண், இந்திய துப்பாக்கி சுடும் அணியில் இடம் பெற்று தன்னுடைய திறமையை நிரூபித்து, 'பேட் லக்' சகி ஆக இருப்பவர் எப்படி 'குட் லக் சகி' ஆக மாறுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.
இப்படத்தை கடந்த வருட மத்தியில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், கொரோனா பரவல் காரணமாக பல தேதிகளில் இப்படத்தின் வெளியீட்டை அறிவித்து, அறிவித்து தள்ளி வைத்தார்கள்.
தற்போது ஜனவரி 28ம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். ஆனால், தெலுங்கில் மட்டுமே வெளியாகிறதா அல்லது தமிழ், மலையாளத்திலும் வெளியாகிறதா என்பது பற்றிய சரியான அறிவிப்பு இல்லை.