விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
மணவாழ்க்கை சரிவராத நிலையில் விவாகரத்து தான் முடிவு… தமிழ் சினிமா மட்டும் அதற்கு விதிவிலக்கு அல்ல. விவாகரத்தில் முடிந்த தமிழ் சினிமா நட்சத்திரங்களின் பட்டியல்…
உலக நாயகன் கமல்ஹாசன் தனது முதல் மனைவி வாணி (1978-1988), இரண்டாவது மனைவி சரிகா (1988-2004) விவாகரத்து செய்தார். அடுத்து கவுதமியுடன் லிவிங் டூகெதரில் இருந்தவர் அவரையும் பிரிந்து விட்டார்.
நடிகரும் இயக்குனருமான பார்த்திபனும் நடிகை சீதாவும் புதிய பாதை படத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 1990-2001 வரை கணவன் மனைவியாக வாழ்ந்து பிரிந்தனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
80களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களுக்கு போட்டியாக கிராம சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டவர் ராமராஜன். நடிகை நளினியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1987 - 2000 வரை வாழ்ந்த இந்த இணையர் பின் பிரிந்தனர். அருண் - அருணா என இரு குழந்தைகள் உள்ளனர்.
நடிகை கவுதமி, சந்தீப் (1998-1999) என்பவரைத் திருமணம் செய்து பிரிந்தார். பின் நடிகை கவுதமியை (2004-2016) கமல்ஹாசன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து பிரிந்தார்.
தமிழ் சினிமாவில் நடிகர் ரகுவரன் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர். நடிகை ரோகிணியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1996-2004 வரை வாழ்ந்த இந்த தம்பதியினர் பின் பிரிந்தனர்.
நடிகர் பிரசாந்த், தனது மனைவி கிரகலட்சுமி ஏற்கெனவே திருமணமானவர் என்பதை மறைத்து தன்னைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறி விவாகரத்து பெற்று பிரிந்தார். (2005-2009) என 4 ஆண்டுகள் இந்த திருமண வாழ்க்கை நீடித்தது.
80களில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக இருந்த நடிகை ரேவதி. ஒளிப்பதிவாளர், நடிகர் சுரேஷ் மேனனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 14 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த பின் இருவரும் பிரிந்தார்கள். (1986-2013) வரை இவர்கள் திருமண வாழ்வு நீடித்தது. 2000ம் ஆண்டு விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற இந்த இணையருக்கு 2013ம் ஆண்டு நீதிமன்றத்தால் விவாகரத்து கொடுக்கப்பட்டது.
இயக்குனர் செல்வராகவன், நடிகை சோனியா அகர்வால் காதலித்து 2006ல் திருமணம் செய்து, திருமணமான 4 வருடங்களிலேயே பிரிந்தார்கள். பின்னர் செல்வராகவன் உதவி இயக்குனர் கீதாஞ்சலியைத் திருமணம் செய்து கொண்டார்.
இந்திய சினிமாவில் நடன இயக்குனராக, நடிகராக, இயக்குனராக முத்திரை பதித்த பிரபுதேவா, ரம்லத் என்பவரை காதல் திருமணம் செய்தார். (1995-2011) வரை இருந்த திருமண வாழ்க்கை 2011ல் முறிந்தது.
சரத்குமார் சாயாதேவி என்பவரை திருமணம் செய்து பின்னர் பிரிந்து ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். அதே போல் ராதிகா, இயக்குனர் நடிகர் பிரதாப் போத்தனை திருமணம் செய்து பின் விவாகரத்தான பின் ரிச்சர்ட் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பின் ரிச்சர்ட்டைப் பிரிந்தார் ராதிகா. பின்னர் நடிகர் சரத்குமாரைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.
தனுஷ் - ஐஸ்வர்யாவின் 18 வருட திருமண வாழ்வு நேற்று முறிந்தது. நடிகர் தனுஷ் 2004ம் ஆண்டில் நவம்பர் மாதம் 18 ஆம் தேதி, நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா , பிரியத்ர்ஷன் - லிசி பிரியதர்ஷன், அரவிந்த்சாமி - காயத்ரி ராமமூர்த்தி, பிரகாஷ்ராஜ் லலிதா குமாரி, சரிதா முகேஷ், ஊர்வசி மனோஜ் கே.ஜெயன், ஸ்ரீவித்யா, வனிதா விஜயகுமார், விந்தியா ஆகியோரும் விவாகரத்து ஆனவர்கள் தான்.