'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் திட்டம் இரண்டு, பூமிகா ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. இவர் அடுத்ததாக கிரைம் படங்களுக்கு பெயர் பெற்ற ஆக்ஷன் கிங் அர்ஜூனுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.தெலுங்கில் சாய் தரம் தேஜ் நடிப்பில் உருவாகியுள்ள ரிபப்லிக் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்,
தற்போது தமிழில் மட்டும் டிரைவர் 'ஜமுனா', 'மோகன் தாஸ்', 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பிசியாக நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், கொரோனா காரணமாக படப்பிடிப்பு இல்லாததால், தற்போது இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக காஷ்மீர் மலைப்பகுதியில் பனிச்சாரால் நனைந்தப்படி இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.