சென்னைக்கு திரும்பிய நடிகர் விஜய் | தனுஷ் நடித்து இயக்கும் புதிய படம் | சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் டி.ராஜேந்தர் | இளையராஜா ரிகர்சலுக்கு வந்த ரஜினிகாந்த்: கைதட்டி பாடல்களை ரசித்தார் | சமந்தாவுடன் இணைந்து நடித்த படம்: மலரும் நினைவுகளை பகிர்ந்த நாகசைதன்யா | நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன் | விக்ரம் பிரபு நடிக்கும் ‛ரத்தமும் சதையும்' | பேஷன் ஷோ ஸ்டைல் வாக் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன் | சண்டைக் காட்சியின்போது விபத்தில் சிக்கிய விஜயதேவரகொண்டா- சமந்தா | மலையாள இசை அமைப்பாளர் காலமானார் |
ஏமாற்றுபவர்கள் இருக்கும்வரை ஏமாறுபவர்களும் இருப்பார்கள் என்பது சொல்வழக்கு. தமிழ் சினிமாவில் கஷ்டப்பட்டு வட்டிக்கு வாங்கி படம் எடுப்பவர்கள் ஒரு பக்கம் இருக்க அவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலும் இன்னொரு பக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவரை திரையரங்குகளில் படம் போடுகிறேன் என்று தயாரிப்பாளர்களிடம் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல் சிலகாலமாக ஓடிடி நிறுவனங்களுக்கு உங்கள் படத்தை நல்ல விலைக்கு விற்று தொகையை பெற்று தருகிறேன் என்று புது வழியை கண்டுபிடித்து அதில் ஏமாற்றி வருகின்றனர்.
இவ்வாறு பணத்தை இழந்த தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் ஏமாந்தது சின்ன தயாரிப்பாளர்கள் ஏமாற்றியது பெரிய தயாரிப்பாளர்கள் என்பதால் நடவடிக்கைகளிலிருந்து எளிதில் தப்பி வருகின்றனர்.