இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

வாரா வாரம் ஓடிடி ரசிகர்களுக்குப் புதுப்படங்கள் வெளியாகி கண்ணுக்கு விருந்து வைப்பது போன்று, இந்த வாரமும் ரசிகர்களாகிய நீங்கள் எதிர்பார்த்த புதிய வரவுகள் வரிசைக்கட்டி நிற்கின்றது. அவை எந்தெந்த படங்கள் என்பது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
வார்-2
இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'வார்-2'. இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ஹிருத்திக் ரோஷன் இணைந்து நடித்து இருந்தனர். கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்து இருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் இன்று(அக்.09ம் தேதி) நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
வேடுவன்
இயக்குநர் பவன் இயக்கத்தில் நடிகர் கண்ணா ரவி நடித்துள்ள வெப் தொடர் 'வேடுவன்'. இந்த தொடரில் சஞ்சீவ், ஐஸ்வர்யா ரகுபதி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த வெப் தொடர் நாளை(அக்.10ம் தேதி) ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
பாம்
இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'பாம்'. இந்த படத்தில் காளி வெங்கட், நாசர், சிங்கம் புலி, பால சரவணன், அபிராமி உள்ளிட்டோரும் நடித்து இருந்தனர். இந்த படம் நாளை(அக்.10ம் தேதி) ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ராம்போ
இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் 'ராம்போ'. இந்த திரைப்படத்தில் குத்துச்சண்டை மையக்கருவாக இடம்பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன், அபிராமி, விடிவி கணேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை(அக்.10ம் தேதி) நேரடியாக வெளியாகிறது.
மிராய்
இந்த 'மிராய்' திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் வெளியானது. இதில் ரித்திகா நாயக், மனோஜ் மஞ்சு, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இந்த திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டாரில் நாளை(அக்.10ம் தேதி) தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.