யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா? | 100 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய் | தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடு | ஒரே டைப் டிசைன்: பிரசாந்த் நீல் மீது விமர்சனம் | தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா? | குஷி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | நீதிமன்ற உத்தரவு ; தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட சேகர் | 68 வயதில் இயக்குனராக மாறிய வில்லன் நடிகர் | குட்டையான உடை அணிந்து குத்தாட்டம் போட்ட ஸ்ரீநீதி! | 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் அசத்திய தமிழ் திரைப்படம் |
தமிழில் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தை பிரச்னை காரணமாக பாதியிலேயே நிறுத்திவிட்டு தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் 15வது படத்தை இயக்கப் போய்விட்டார் ஷங்கர். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பூஜையுடன் ஆரம்பமாகி நடந்தது. தற்போது கொரானோ தொற்று பரவல் காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படத்தைத் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் தியேட்டர் உரிமை அல்லாத டிஜிட்டல் உரிமை மட்டும் 200 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் வெளிவந்த பின் ராம்சரண் பான்-இந்தியா ஸ்டார் ஆக உயரும் வாய்ப்புகள் அதிகம். அவருடைய அடுத்த படத்தின் இயக்குனர் ஷங்கர் என்பதால் அந்தப் படமும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஜீ 5 ஓடிடி நிறுவனம் சார்பில் டிஜிட்டல் உரிமை 200 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
ஷங்கர், ரஜினிகாந்த் இணைந்த '2.0' படத்தின் டிஜிட்டல் உரிமையை ஜீ 5 நிறுவனம் 110 கோடி கொடுத்து வாங்கியிருந்தது. ஷங்கரின் அடுத்த படத்தின் டிஜிட்டல் உரிமை சுமார் இரண்டு மடங்கு அதிகமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.