''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
2022ம் ஆண்டு பொங்கல் தினம் திரையுலகத்தைப் பொறுத்தவரை பெரும் சோகத்துடன்தான் ஆரம்பமாகியுள்ளது. முன்னணி நடிகர்களின் படங்கள் வரவில்லை என்றாலும் சில படங்கள் வெளியானதால் ஓரளவிற்கு வசூலைப் பார்க்கலாம் என தியேட்டர்காரர்கள் நினைத்திருந்தனர்.
ஆனால், பொங்கல் விடுமுறை நாட்களிலேயே வெளியான படங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் கூட மக்கள் வரவில்லை. சில படங்களுக்கான காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. சில படங்களுக்கான காட்சிகள் குறைந்த அளவு ரசிகர்களுடன் நடைபெற்றன. இது தியேட்டர்காரர்களுக்கும், அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.
இன்றும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த வார சோகம் இந்த வாரமும் தொடர்கிறது. இன்று சென்னை உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்களில் காலை முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இன்றும் பல படங்களின் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வந்துள்ளது.
இன்றைய மற்ற காட்சிகளுக்கான முன்பதிவு இணையதளங்களில் சென்று பார்த்தால் பல தியேட்டர்களில் ஒரு டிக்கெட் கூட முன்பதிவு செய்யப்படவில்லை. சில தியேட்டர்களில் ஒற்றை இலக்கத்தில்தான் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொங்கலுக்கு வெளியான, “கார்பன், என்ன சொல்லப் போகிறாய், கொம்பு வச்ச சிங்கம்டா, நாய் சேகர், தேள்” ஆகிய படங்களில் ஒரு படம் கூட அனைத்து ரசிகர்களுக்குமான படமாக இல்லாமல் மக்களை தியேட்டர்கள் பக்கம் வரவழைக்கத் தவறிவிட்டது.