2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்து அஜித்குமார், எச்.வினோத், போனிகபூர் கூட்டணி வலிமை படத்திலும் இணைந்ததை அடுத்து மீண்டும் அஜித்தின் 61வது படத்திலும் இதே கூட்டணி இணையப் போகிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக பொங்கலுக்கு வெளியாக இருந்த வலிமை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. என்றாலும் மீண்டும் அவர்கள் மூன்றாவது முறையாக இணையும் அஜித் 61வது படத்தின் வேலைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மும்பை சென்று போனி கபூரை அவரது அலுவலகத்தில் சந்தித்திருக்கிறார் அஜித்குமார். அப்போது மீண்டும் அவர்கள் இணையும் மூன்றாவது படத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இதுகுறித்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார் போனிகபூர். மேலும், அஜித் 61வது படத்தின் படபிடிப்பு மார்ச் மாதம் முதல் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்க உள்ளது.