அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோக்களில் ஒருவர் சிரஞ்சீவி. தனி கட்சி ஆரம்பித்து, அதைக் கலைத்துவிட்டு காங்கிரசில் சேர்ந்து ராஜ்ய சபா எம்.பி., ஆகி, மத்திய அமைச்சராகி பின் அரசியலைவிட்டே விலகியவர். அரசியலை விட்டு விலகிய பின் மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். தற்போது அடுத்தடுத்து நான்கு படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த சில தினங்களாக சிரஞ்சீவி மீண்டும் அரசியலில் குதிக்கப் போவதாக தெலுங்கு செய்தி சேனல்கள் சில செய்திகளை வெளியிட்டன. அவற்றிற்குப் பதில் தரும் விதமாக தன்னுடைய நிலையை தெளிவாக விளக்கியுள்ளார் சிரஞ்சீவி. “தெலுங்குத் திரையுலகத்தின் நலன் கருதி, தியேட்டர்களின் வாழ்வாதாரம் கருதி, ஆந்திர முதல்வர் ஒய்எஸ் ஜெகன் அவர்களை சந்தித்துப் பேசியதை, நான் ராஜ்யசபா எம்.பி., ஆவதற்காக சந்தித்துப் பேசியதாக சில மீடியாக்களில் செய்தி வெளிவந்துள்ளது. அவை அனைத்தும் ஆதாரமற்றவை. அரசியலை விட்டு நான் விலகியிருக்கிறேன், மீண்டும் எப்போதும் அரசியலுக்கு வர மாட்டேன். யூகங்களின் அடிப்படையில் செய்திகளை வெளியிடாதீர்கள். இந்த செய்திகளுக்கும், விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்,” என அவர் தெரிவித்துள்ளார்.