'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரீஸ், ஈ மா யூ, ஜல்லிக்கட்டு என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது கோலிவுட், பாலிவுட் என மொழி தாண்டிய படைப்பாளிகளையும் கவர்ந்தவர். தற்போது முதன்முறையாக மம்முட்டியை வைத்து நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டார். கதை பிடித்துப்போனதால் இந்தப்படத்தை மம்முட்டியே தயாரிக்கவும் செய்துள்ளார்.
தற்போது இன்னொரு ஆச்சர்யமாக இந்தப்படம் வெளிவருவதற்குள்ளாகவே லிஜோ ஜோஸ் பள்ளிசேரியின் டைரக்சனில் அடுத்து ஒரு படத்திலும் நடிக்கிறார் மம்முட்டி. ஆனால் இது முழு நீள படமல்ல. பிரபல மலையாள எழுத்தாளரும் இயக்குனருமான எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய பத்து சிறுகதைகளை மையப்படுத்தி பத்து படங்களின் தொகுப்பாக ஆந்தாலாஜி படம் ஒன்று தயாராகிறது. அதில் ஒரு கதையாக இவர்களது படமும் உருவாகிறது.