பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' | பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'புஷ்பா' படத்தில் 'ஓ சொல்றியா..' என்ற ஒரு பாடலுக்கு சமந்தா கெட்ட ஆட்டம் ஆடியிருந்தார். அப்பாடலுக்கு தியேட்டர்களில் அமோக வரவேற்பு கிடைத்தது.
இந்தப் பாடலின் லிரிக் வீடியோ படம் வெளியாவதற்கு முன்பே யூடியூப் தளத்தில் வெளியாகி பெரிய ஹிட் ஆனது. அந்த வீடியோவிற்கு மட்டும் தமிழில் இதுவரை 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளது.
இப்பாடலின் முழு வீடியோ கடந்த வாரம் 7ம் தேதி வெளியானது. வெளியான நான்கு நாட்களிலேயே 1 கோடி பார்வைகளைக் கடந்து தொடர்ந்து டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. தெலுங்குப் பாடல் நான்கு நாட்களில் 3 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
தெலுங்கு, தமிழில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் சமந்தா, முதலில் இப்பாடலில் நடிக்கத் தயங்கினார். அவரை படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் தான் வற்புறுத்தி நடிக்க வைத்துள்ளார். இப்போது இந்த ஒரு பாடலால் ரசிகர்களிடம் சமந்தாவுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.