பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... | தி ராஜா சாப் : முதல் நாள் வசூல் ரூ.112 கோடி | தணிக்கையில் பிரச்னை... மாற்றம் வேண்டும் என்கிறார் கமல் | கருப்பான பெண்ணாக நடிக்கவும் கலரான பெண்ணையே தேர்வு செய்கிறார்கள்: பிரானா வருத்தம் | பிளாஷ்பேக் : ஒரேநாளில் மோதி வெற்றி பெற்ற 3 ஹீரோக்கள் | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த டி.எஸ்.பாலய்யா | 'வா வாத்தியார்' படத்தை ஏலம் விட கோர்ட் உத்தரவு | தமிழில் வெளியாகும் சாரா அர்ஜுனின் தெலுங்கு படம் |

மாநாடு படத்திற்குப் பிறகு சிம்புவின் திரைவாழ்க்கையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு மற்றும் கொரோனா குமார், பத்து தல என சில படங்களில் நடிக்க வருகிறார் சிம்பு. இந்த நிலையில் ஈஸ்வரன் படத்தில் ந டித்து வந்தபோது அப்பட நாயகி நிதி அகர்வாலுக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் தற்போது அவர்கள் ஒரே வீட்டில் வசித்து வருவது போலவும் கோலிவுட்டில் ஒரு கிசுகிசு பரவிக்கொண்டிருக்கிறது.
ஏற்கனவே நயன்தாரா, ஹன்சிகா போன்ற நடிகைகளை காதலித்த சிம்பு சில மாதங்களிலேயே அந்த காதலை முறித்துக் கொண்டார். இந்நிலையில் மூன்றாவதாக நிதி அகர்வாலை காதலிப்பதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. என்றாலும் சிம்புவின் இந்த காதலாவது கைக்கூடி கல்யாணத்தில் முடிய வேண்டும் என்று அவரது அபிமானிகள் வேண்டிக்கொண்டு வருகிறார்கள்.