பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா மற்றும் பலர் நடித்து 2019ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி வெளிவந்த படம் 'பேட்ட'. இன்றுடன் படம் வெளிவந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த கொண்டாட்டத்துக்காக படத்தில் நீக்கப்பட்ட காட்சி ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்கள்.
'இன்னொரு டீ சாப்பிடலாமா' என்ற தலைப்புடன் வெளியாகியுள்ள அந்தக்காட்சியில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள். ஒரு படம் வெளிவந்து மூன்று ஆண்டுகள் ஆன பிறகு டெலிடட் சீன் வெளியிடுவதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான். இருந்தாலும் ரஜினி ரசிகர்கள் இதையும் டிரெண்டிங்கில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
கார்த்திக் சுப்பராஜ் இன்றைய மூன்றாம் வருடக் கொண்டாட்டம் குறித்து, “என்னுடைய மற்றும் எனது குழுவினரின் வாழ்க்கையில் மிகவும் மேஜிக்கலான நாளின் மூன்றாவது வருடம்…லவ் யு தலைவா…” எனக் குறிப்பிட்டு படத்தின் புது போஸ்டருடன் டுவீட் செய்துள்ளார்.