நயன்தாராவின் ‛கோல்ட்' அப்டேட் | விடுதலை : வெற்றிமாறனின் திட்டம் | சூர்யாவின் இரும்புக்கை மாயாவி கைவிடப்பட்டது ஏன்? - லோகேஷ் பதில் | சக நடிகர்களை தவிர்க்கிறாரா கமல்ஹாசன், 'விக்ரம்' சர்ச்சை | நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி | 'லத்தி' இயக்குனருக்கு அதிர்ச்சி கொடுத்த விஷால் | பாலாவுடன் சண்டையா? - வதந்திகளுக்கு சூர்யா பதிலடி | 'இந்தியன் 2' நடக்கும் : கமல்ஹாசன் தகவல் | தங்கர்பச்சானின் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' - ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் | கவனம் ஈர்த்த 'வீட்ல விசேஷம்' பட டிரைலர் |
அஜித் நடித்த வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என நான்கு படங்களை அடுத்தடுத்து இயக்கியவர் சிறுத்தை சிவா. இந்த நிலையில் தற்போது சமூகவலைதளத்தில் அஜித்துக்கு நன்றி தெரிவித்து அவர் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், ஜனவரி பத்தாம் தேதி தான் வீரம் மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியான நாள். இந்த படங்கள் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. எனக்கு மட்டுமின்றி என்னுடைய படக்குழுவினர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியான நாள் இது. எனவே அஜித், அவரது ரசிகர்கள், மீடியா நண்பர்கள், சினிமா ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று சிறுத்தை சிவா அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.