தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? |
ஓபிசி பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடுக்கு சாதகமாக உச்சநீதி மன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதனை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த தீர்ப்பை வரவேற்றும், தமிழக முதல்வரை பாராட்டியும், கொங்கு மண்டல மக்கள் பயன்பெறுவார்கள் என்பதாக குறிப்பிட்டும் சூர்யா பெயரில் ஒரு அறிக்கை வெளியானது. இது போலியானது என்று சூர்யாவின் நண்பரும், சூர்யாவின் தயாரிப்பு நிறுவன செயல் அதிகாரியுமான ராஜசேகர பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சூர்யா பெயரில் வெளியான அந்த அறிக்கையைப் புறக்கணிக்குமாறும் இந்தப் போலியான அறிக்கையை வெளியிட்டவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.