''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் தி கிரேட் இண்டியன் கிச்சன். சுராஜ் வெஞ்சரமுடு, நிமிஷா சஜயன் உள்பட பலர் நடித்திருந்தினர். ஜியோ பேபி இயக்கி இருந்தார். வாழ்க்கை கனவுகளை சமையல் அறைக்குள் தொலைக்கும் பெண்களின் கதையாக இது உருவாகி இருந்தது. சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த ஒலி வடிவமைப்பு ஆகிய பிரிவுகளுக்கான கேரள மாநிலத் திரைப்பட விருதைப் பெற்றது.
இந்த படம் இதே பெயரில் தமிழில் ரீமேக் ஆகி வருகிறது. ஆர்.கண்ணன் இயக்குகிறார். நிமிஷா நடித்த கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த படம் வருகிற 21ம் தேதி முதல் ஜப்பான் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அங்கு வெளியாகிறது. இதனை இயக்குனர் ஜியோ பேபி அறிவித்திருக்கிறார்.
இந்தியாவில் தயாராகும் பெரிய நட்சத்திரங்களின் பெரிய பட்ஜெட் படங்களே இதுவரை ஜப்பானிய மொழியல் வெளியாகி இருக்கிறது. முதன் முறையாக ஒரு சிறு பட்ஜெட் படம் வெளியாகி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பானியர்களின் கலாச்சாரம், தென்னிந்திய கலாச்சாரத்தை போன்றது என்பதால் இந்த படம் அங்கு வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.