''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தெலுங்கு சினிமாவில் 'பிரின்ஸ்' என்று அன்போடு அழைக்கப்படுகிறவர் மகேஷ் பாபு. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு முழங்கால் வலி பிரச்சினை ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த டிசம்பர் 14ம் தேதி ஸ்பெயினில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முழுங்கால் பிரச்சினை குணமாகி படப்பிடிப்புக்கு திரும்பும் வேளையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
அவர் தெரிவித்திருப்பதாவது: தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போதிலும், லேசான அறிகுறிகளுடன் கூடிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நான், மருத்துவ வழிகாட்டுதலைப் பின்பற்றி தற்போது வீட்டில் என்னை தனிமைப்படுத்தி உள்ளேன்.
என்னுடன் தொடர்பிலிருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தடுப்பூசி செலுத்தாத அனைவரும் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் தடுப்பூசி கடுமையான அறிகுறிகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது. கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்.
இவ்வாறு மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.
மகேஷ் பாபவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.