சசிகுமாரின் 'மை லார்ட்' படம் பிப்ரவரி 13ல் ரிலீஸ் | நடிகர் ரகுநாத் மாரடைப்பால் காலமானார் | மீண்டும் தாத்தாவான நடிகர் சிரஞ்சீவி! | சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது! | 'அசுரன்' பட பாடலுக்கு கிடைத்த விருது: ஜி.வி.பிரகாசுக்கு நன்றி சொன்ன பாடகி சைந்தவி! | மீண்டும் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்? | சூர்யாவின் 'கர்ணா' கைவிடவில்லை! - இயக்குனர் தகவல் | 94வது வயதில் 61வது படத்தை அறிவித்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்! | '7ஜி ரெயின்போ காலனி 2' படம் குறித்து பகிர்ந்த அனஸ்வரா ராஜன்! | இயக்குனராக மாறும் பிரபல எழுத்தாளர்! |

போக்கஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் முதல் படம் கடல் கன்னியை மையப்படுத்திய படமாக உருவாகிறது. இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். இதற்கு முன் சிலர் கடல் கன்னி வேடத்தில் சிலர் நடித்திருந்தாலும் இந்த படம் தான் முழுநீள படமாக உருவாகிறது. அந்தவகையில் முழு நீள கடல் கன்னி வேடத்தில் நடிக்கும் முதல் இந்திய நடிகை இவர் தான். இவருடன் சுனைனா, முனீஷ்காந்த், இந்துமதி மற்றும் 50 குழந்தைகள் நடிக்கிறார்கள்.
இப்படத்தை, மணிரத்னம் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இயக்குகிறார். இவர், 'துப்பாக்கி முனை' என்ற படத்தை இதற்கு முன் இயக்கி உள்ளார். இந்த படத்திற்காக சென்னை தி.நகரில் ரூ.50 லட்சம் மதிப்பில் செட்டி போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதையடுத்து திருச்செந்தூர் மணப்பாடு என்கிற இடத்தில் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் முடிவடையும். 2022 கோடையில் படம் வெளியாக உள்ளது. படத்தில் அதிகளவில் அனிமேஷன் காட்சிகள் உள்ளன. படம் முடிந்ததும் இதற்கான பணிகள் துவங்குகின்றன.