மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் |
கொரோனா மூன்றாவது அலை விஸ்வரூபமெடுக்க ஆரம்பித்துவிட்டது. இந்த அலை வரும் போது மற்ற தொழில்களுக்கு கொஞ்சம் தாமதமாக பாதிப்பு வர ஆரம்பித்தாலும், சினிமா தொழில்தான் முதலில் பாதிக்கப்படுகிறது. தியேட்டர்கள் மூடல் அல்லது 50 சதவீத அறிவிப்பு என்பது கடந்த இரண்டு வருடங்களாக வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.
பல கோடி ரூபாய் முதலீடு செய்து எடுக்கப்படும் படங்கள், மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள், சிங்கிள் தியேட்டர்கள், படப்பிடிப்பு என என பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது திரையுலகம்.
இந்த மூன்றாவது அலையில் முதலில் ஹிந்தியில்தான் வெளியீட்டைத் தள்ளி வைக்கும் முதல் அறிவிப்பு வெளியானது. ஷாகித் கபூர் நடிக்கும் 'ஜெர்சி' படத்தைத் தள்ளி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
அடுத்து அக்ஷய்குமார், சஞ்சதய் தத், சோனு சூட், மனுஷி சில்லர் ஆகியோர் நடிக்கும் பிரம்மாண்ட சரித்திரப் படமான 'பிரித்விராஜ்' படத்தை இந்த ஜனவரி மாதம் 21ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். இப்போது படத்தைத் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.
அடுத்து ஆலியா பட் நடித்துள்ள 'கங்குபாய் கத்தியவாடி' படமும் தள்ளிப் போகலாம் என்கிறார்கள். இப்படத்தை முதலில் ஜனவரி 6ல் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆலியா பட் நடித்த 'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு வழிவிட்டு பிப்ரவரியில் ரிலீஸ் செய்வதாகச் சொன்னார்கள். ஆனால், படம் மேலும் தள்ளிப் போகலாம் என்றே பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.