'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி |

கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து பாலிவுட்டில் அது தன் கோர முகத்தை காட்டி வருகிறது. ஏற்கெனவே நடிகர் அர்ஜூன் கபூர் குடும்பத்தை தாக்கிய கொரோனா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை மிர்னல் தாக்கூரை தாக்கியது. இந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் அவரது மனைவி பிரியா ருன்சாலுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஜான் ஆபிரகாம் கூறியிருப்பதாவது: 3 நாட்களுக்கு முன் நான் தொடர்பில் இருந்தவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதனால் நானும் எனது மனைவியும் பரிசோதனை செய்து கொண்டோம். இதில் எனக்கும், பிரியாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டோம். முககவசம் அணிந்து, ஆரோக்கியமாக மற்றும் நலமாக நீங்கள் இருக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.
ஏக்தா கபூர்
இதேபோல பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏராளமான திரைப்படங்கள், நூற்றுக் கணக்கான தொலைக்காட்சி தொடர்கள், வெப் சீரிஸ்களை தயாரித்துள்ளவர் ஏக்தா கபூர்.
இதுகுறித்த அவர் கூறியிருப்பதாவது: எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்த போதிலும், பரிசோதனையில் கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது. என்றாலும் நான் நலமாக இருக்கிறேன், என்னைத் தொடர்பு கொண்ட அனைவரும் தங்களைத் தாங்களே பரிசோதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.