அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் |

மலையாள திரையுலகில் வித்தியாசமான அதேசமயம் துணிச்சலான வேடங்களில் நடித்து ரசிகர்களை பிரமிக்க வைக்கும் நடிகைகளில் முக்கியமானவர் ஸ்வேதா மேனன். அவரது ரதி நிர்வேதம் படமாகட்டும், அல்லது தனது நிஜ பிரசவத்தையே படமாக்க அனுமதித்த 'களிமண்ணு' படமாகட்டும், நடிப்புக்காக வழக்கமான எல்லைக்கோடுகளை தாண்ட தயங்காதவர் ஸ்வேதா மேனன். கடந்த இரண்டு வருடங்களாக பரபரப்பில் இருந்து ஒதுங்கியிருந்த ஸ்வேதா மேனன் தற்போது புத்தாண்டை முன்னிட்டு மவுனம் கலைத்துள்ளார்.
தனது சோஷியல் மீடியா பக்கத்தில் அவர் கூறும்போது, “கடந்த இரண்டு வருடங்கள் எல்லாவற்றையுமே மாற்றி விட்டன. நினைத்து பார்த்தால் மாநாடு படம் போலவே வாழ்க்கை மாறிவிட்டது. கொரோனா வந்தது.. லாக்டவுன் போட்டார்கள்.. ஓரளவு நிலைமை சரியானது.. ரிப்பீட்டு.. திரும்பவும் கொரோனா.. லாக்டவுன்.. மீண்டும் சரியானது.. இந்த புது வருடமாவது இந்த லூப்பில் இருந்து நம்மை காப்பாற்றும் என நம்புகிறேன்” என கூறியுள்ளார் ஸ்வேதா மேனன்