டி.ராஜேந்தர் பூரண குணமடைந்தார் : அமெரிக்காவில் ஒரு மாதம் ஓய்வு | சமந்தாவின் இன்ஸ்டா முடக்கப்பட்டதா? | வெந்து தணிந்தது காடு - இசை விழா ஆகஸ்ட்டில் நடைபெறுகிறது | பொன்னியின் செல்வன் - நந்தினியாக ஐஸ்வர்யா ராய் | 'தி கிரேமேன்' - பட புரொமோஷனுக்காக ஹாலிவுட் பறந்த தனுஷ் | விஜய்யின் வாரிசு - பிரெஞ்சு படத்தின் தழுவலா? | பார்த்திபனை ஆச்சரியப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | உலக அளவில் சாதனை படைத்த 'கேஜிஎப்' போஜ்புரி | ஜவான் - ஷாருக்கானுக்கும் வில்லன் விஜய் சேதுபதி? | ஷங்கரின் படத்தில் நடனத்திற்கு 1000 பேர், சண்டைக்கு 1200 பேர் |
மலையாளத்தில் வெளியான மாயநதி படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி. தமிழில் விஷாலின் ‛ஆக்சன்', தனுஷின் 'ஜகமே தந்திரம்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். தற்போது பொன்னியின் செல்வன், கேப்டன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில் மலையாளத்தில் 'அர்ச்சனா 31 நாட் அவுட்' என்கிற படத்தில் நடித்து முடித்து விட்டார் ஐஸ்வர்ய லட்சுமி. அறிமுக இயக்குனர் அகில் அனில்குமார் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டர் வெளியானது. வரும் பிப்-4ம் தேதி இந்தப்படம் வெளியாகிறது. “முதன்முறையாக இந்தப்படத்தில் டைட்டில் ரோலில் நடித்துள்ளது சந்தோஷமாக இருக்கிறது. எனது திரையுலக பயணத்தில் நிச்சயமாக இது ஒரு மைல்கல் தான். இன்னும் சொல்லப்படாத பெண்களின் கதைகள் நிறைய இருக்கின்றன. அதுபோன்ற கதைகள் என்னை தேடி வரும்போது அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பேன்” என பெருமிதத்துடன் கூறியுள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி.