''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கடந்த 2016ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்கிற படத்தில் இணைந்து நடித்தவர்கள் அபி சரவணன் மற்றும் அதிதி மேனன். தற்போது அபி சரவணன் விஜய் விஷ்வா என தனது பெயரை மாற்றிக் கொண்டு படங்களில் நடித்து வருகிறார். அதேபோல அதிதி மேனன் தற்போது மிர்னா மேனன் என தனது பெயரை மாற்றிக் கொண்டு மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
பட்டதாரி படத்தில் நடித்த போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் முடிந்து 3 வருடங்களுக்கு பிறகு அபி சரவணனுக்கும் தனக்கும் திருமணம் நடக்கவில்லை என்றும் போலியான சான்றிதழ்களை வைத்து தன்னை அவர் மிரட்டுகிறார் என்றும் காவல்துறையில் புகார் அளித்தார் அதிதி மேனன். அபி சரவணனுக்கு முன்பே பல பெண்களுடன் தொடர்பு இருந்தது என்றும் அவர் அந்த புகாரில் கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து மிர்னா மேனன் மீது அபி சரவணன் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அபி சரவணன் கொடுத்த அந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் மிர்னா மேனன். இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
மேலும் கடந்த டிசம்பர் 22, 2021 அன்று இந்த வழக்கில் தீர்ப்பு கிடைத்துள்ளது. அந்த தீர்ப்பில் மிர்னாவும் அபி சரவணனும் திருமணம் செய்து கொண்டது உண்மைதான் என்றும் இரண்டு மாதத்திற்குள் அபி சரவணனுடன் இணைந்து மிர்னா மேனன் வாழ வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து அபி சரவணன் நேற்று கூறியதாவது: மிர்னா மேனன் எனது சட்டபூர்வமான மனைவி என்று நான் நீதிமன்றத்தில் நிரூபித்தேன். அதற்கான தீர்ப்பு தான் இப்போது வந்துள்ளது. என் காதல் உண்மையானது. உண்மையான என் காதலை புரிந்துகொண்டு அவர் மீண்டும் என்னிடம் திரும்பி வந்தால் என்னைவிட சந்தோஷப்படும் நபர் வேறு யாருமில்லை என்றார்.