தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்த நடிகர் விஜய்! | கமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது | அம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா? விஜயலட்சுமி காட்டமான பதில் | ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து - போனி கபூர் | ‛ரஜினி 169' எப்போது ஆரம்பம் | விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | சித்தார்த் நடிக்கும் புதிய ஹிந்தி வெப் தொடர் | கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியாகும் 'தி லெஜண்ட்' பட பர்ஸ்ட் லுக் | மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திரிஷா சாமி தரிசனம் | 'டான்' வெற்றியைக் கொண்டாடிய படக்குழுவினர் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் .ஜே .சூர்யா, எஸ். ஏ. சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நவம்பர் 25ஆம் தேதி வெளியான படம் மாநாடு. மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இப்படம் சிம்புவின் கேரியரில் முதல் 100 கோடி வசூல் சாதனை புரிந்தது. இதையடுத்து மாநாடு படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார் வெங்கட்பிரபு. கடந்த 24ஆம் தேதி மாநாடு படத்தை சோனி லைவ் ஓடிடியிலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாநாடு படத்தைப் பார்த்துவிட்டு பல திரையுலக பிரபலங்கள் படக்குழுவை பாராட்டிய நிலையில், செல்வராகவனும் தற்போது பாராட்டு தெரிவித்து ஒரு செய்தி வெளியிட்டு இருக்கிறார். அதில் தாமதமாக மாநாடு பார்த்ததற்கு மன்னிக்கவும். ரசித்து பார்த்தேன். சிம்பு, எஸ்.ஜே. சூர்யா அருமை. யுவன், வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இது விடா முயற்சிக்கும், அயராத உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று தனது பாராட்டுக்களை தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.