ஆமிர்கான் படத்தின் தோல்வி ; ரசிகர்களுக்கு நன்றிசொன்ன விஜயசாந்தி | டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கும் மடோனா | வாரிசு என்பதால் மட்டுமே வெற்றி பெற முடியாது: அதிதி ஷங்கர் பதில் | விருமன் திரைக்கு வந்த ஒரே நாளில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழு! | கவர்ச்சிக்கு மாறிய லாஸ்லியா! | செப்.,2ல் வருகிறது அரவிந்தசாமியின் ரெண்டகம் | விஜய் 67வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? | 75வது சுதந்திர தினம்: கமல்ஹாசன் வாழ்த்து | 30 ஆண்டுகளை நிறைவு செய்த 'சூரியன்' | லால் சிங் சத்தா: விஜய் சேதுபதி ஜஸ்ட் எஸ்கேப் |
நடிகர் ஜெயராம் கதாநாயகனாக நடிப்பதை குறைத்துக் கொண்டு தற்போது குணச்சித்ர கதாபாத்திரங்கள் பக்கம் தனது ரூட்டை மாற்றியுள்ளார். அந்தவகையில் தெலுங்கு திரையுலகிலும் தொடர்ந்து அவரை தேடி வாய்ப்புகள் வருகின்றன. கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'அல வைகுண்டபுரம்லோ' என்கிற படத்தில் நடித்திருந்தார் ஜெயராம். அந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிரபாஸ் நடிக்கும் 'ராதே ஷ்யாம்' படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார், இதையடுத்து ஜூனியர் என்டிஆர் படத்திலும் நடிக்கிறார் ஜெயராம்.
வரும் ஜன-14ஆம் தேதி ராதே ஷ்யாம் வெளியாகவுள்ள நிலையில் தற்போது அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார் ஜெயராம். அந்தவிதமாக சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையும் பிரபாஸ் உள்ளிட்ட ராதே ஷ்யாம் படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடிய ஜெயராம் அந்த புகைப்படங்களையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.