மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் | அப்ப தியேட்டரில் ஓடின இப்ப, செல்போனில் ஓடுது : நடிகை லதா | பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2 | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு பிப்.,யில் டும் டும் : ரகசியமாய் நடந்ததா நிச்சயதார்த்தம் | விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! |
உலக அளவில் நம்பர் 1 வீடியோ தளமாக யு டியூப் தான் இருக்கிறது. இத்தளத்தில் தினமும் லட்சக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றப்படுகிறது. இந்திய சினிமா உலகமே தற்போது யு டியூப் தளத்தைத்தான் தங்களுக்கான இலவச விளம்பர வீடியோ தளமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
டீசர்கள், டிரைலர்கள், பாடல்கள் என பலவும் யு டியூப் தளத்தில் பதிவேற்றப்படுகிறது. இதன் மூலம் படங்களுக்கு இலவசமாகவே பெரும் விளம்பரம் கிடைப்பதோடு, சில லட்சம் வருமானங்களும் கிடைக்கிறது.
தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இயைமைப்பில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மற்றும் பலர் நடிக்க வெளிவந்த படம் 'புஷ்பா'. இப்படத்தில் இடம் பெற்ற 'ஓ அன்டாவா.. ஓஓ அன்டாவா' பாடல் யு டியூப் தளத்தில் கடந்த வாரத்தில் உலக அளவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக இப்பாடல் முதலிடத்தில்தான் உள்ளது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள மற்றொரு பாடலான 'சாமி சாமி' பாடல் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
'ஓ அன்டாவா' பாடல் தற்போது 90 மில்லியன் பார்வைகளை யு டியூபில் கடந்துள்ளது. தமிழில் 27 மில்லியன், ஹிந்தியில் 16 மில்லியன் கன்னடத்தில் 10 மில்லியன், மலையாளத்தில் 3 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது.