சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
2021ம் ஆண்டின் கடைசி வாரத்திற்கு வந்துவிட்டோம். இந்த 2021ம் ஆண்டில் இதுவரையில் தியேட்டர்களில் சுமார் 125 படங்களும், ஓடிடி தளங்களில் 40 படங்களும் வெளிவந்துள்ளன. வரும் வாரம் டிசம்பர் 31ம் தேதி தான் இந்த ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமை. அன்றைய தினம் 13 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஓரிரு படங்களைத் தவிர மற்ற படங்கள் அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள்தான். டிசம்பர் 30ம் தேதி 'பிளான் பண்ணி பண்ணனும்' படம் வெளியாக உள்ளது. வரும் வாரம் இத்தனை படங்களும் வெளியானால் இந்த ஆண்டில் தியேட்டர்களில் வெளியான படங்களின் எண்ணிக்கை 135ஐத் தாண்டும். ஓடிடி தளத்தையும் சேர்த்தால் 175 படங்களைக் கடக்கும்.
கடந்த ஆண்டில் ஓடிடி தளங்களில் 24 படங்களே வெளிவந்த நிலையில், இந்த ஆண்டில் அது 40 படங்களாக அதிகரித்துள்ளது. தியேட்டர்களில் வெளியான படங்களுடன் ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்கு படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளன.
வரும் வாரம் வெளியாவதாய் அறிவிக்கப்பட்டுள்ள படங்கள்...
டிசம்பர் 30
பிளான் பண்ணி பண்ணனும்
டிசம்பர் 31
இபிகோ 302
கரையேறும் கனவுகள்
மதுரை மணிக்குறவன்
மீண்டும்
நீ சுடத்தான் வந்தியா
ஒபாமா உங்களுக்காக
ஓணான்
பொண்ணு மாப்பிள்ளை
சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை
சில்லாட்ட
தண்ணி வண்டி
தீர்ப்புகள் விற்கப்படும்
வேலன்