பொங்கல் போட்டியில் முந்தும் 'மத கஜ ராஜா' | ஒரே நாளில் வசூல் அப்டேட்டை நிறுத்திய 'கேம் சேஞ்ஜர்' | நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் 'வாடிவாசல்' | ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! |
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் வலிமை. அவருடன் பாலிவுட் நடிகை ஹூமா குரோஷி மற்றும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் இரண்டு பாடல்கள் மற்றும் தீம் மியூசிக்கும் வெளியிடப்பட்டது. மேலும் வரும் பொங்கல் தினத்தையொட்டி வலிமை படம் திரைக்கு வருவது உறுதி செய்யபட்டுள்ளது.
இப்படியான நிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் அளித்த ஒரு பேட்டியில், அஜித் நடித்துள்ள வலிமை படம் வெளியானதும் கண்டிப்பாக பார்ப்பேன் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நல்ல படங்களை பார்ப்பது உண்டு. பெரும்பாலும் விமானத்தில் பயணிக்கும் போது படங்களை பார்ப்பேன். சமீபத்தில் சர்தார் உத்தம் என்ற படத்தை பார்த்தேன் ரொம்ப பிடித்து இருந்தது என்றும் வானதி சீனிவாசன் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் .