'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கர், கமலை வைத்து இந்தியன்-2 படத்தை தொடங்கினார். ஆனால் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், அடுத்தடுத்த சில பிரச்சனைகளால் கிட்டத்தட்ட அந்தப்படம் இடையிலே நிற்கிறது. இதையடுத்து நடிகர் ராம்சரணை வைத்து தெலுங்கில் புதிய படம் ஒன்றை ஆரம்பித்த ஷங்கர் இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பையும் நடத்தி முடித்து விட்டார்.
இந்தநிலையில் இந்தப்படத்தின் படத்தொகுப்பாளராக மலையாள திரையுலகை சேர்ந்த சமீர் முஹமது என்பவர் ஷங்கர் கூட்டணியில் புதிதாக இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த பத்து வருடங்களாக ஷங்கர் படங்களின் படத்தொகுப்பாளராக ஆண்டனி பணிபுரிந்து வந்தார். கடைசியாக 2.0 படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றினார். இந்தநிலையில் இந்தப்படத்தில் தான் இணைந்துள்ள தகவலை வெளிப்படுத்தியுள்ளார் சமீர் முஹமது.
“கனவாக இருந்த விஷயம் இப்போது நனவாகி இருக்கிறது. என்னை நானே அடிக்கடி கிள்ளிப்பார்த்து கொள்கிறேன்.. இந்தமுறை ஷங்கர் சாருடன் முதன்முறையாக இணைந்து தெலுங்கு திரையுலகில் நுழைகிறேன்” என கூறியுள்ள சமீர் முஹமது, இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்தற்கு காரணமான சண்டைப்பயிற்சி இயக்குனர்களான அன்பறிவ் இருவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்..
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கிளாசிக் படமான சார்லி மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகம் ஆனவர் தான் சமீர் முஹமது.. தற்போது மோகன்லாலின் ஆராட்டு, பிரித்விராஜின் கடுவா ஆகிய படங்களில் பணியாற்றி வருகிறார்.