என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

மலையாளத்தில் மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் அபர்ணா பாலமுரளி. தமிழில் எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கடந்தாண்டு வெளியான சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தநிலையில் இவர் படப்பிடிப்பின்போது உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றதாகவும் செய்திகள் வெளியாகின..
இதை மறுத்துள்ள அபர்ணா, “தயவுசெய்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்.. நான் நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறேன். என் நண்பர்களும் உறவினர்களும் இதுபோன்ற செய்திகளால் அச்சப்பட வேண்டாம். சமீபத்தில் நான் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் இங்கே பகிர்ந்துள்ளேன்” என தனது சோஷியல் மீடியா பக்கத்தில் கூறியுள்ளார்.