இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள பிரபல அமீன் பீர் பெரிய தர்காவில் சந்தனக்கூடு உரூஸ் திருவிழா நடந்து வருகிறது. இதில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திரண்டு வந்து பிரார்த்தனை செய்து வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக குறைந்த அளவிலான பக்தர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மட்டும் சந்தனகூடு விழாவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று அதிகாலை அமீன் பீர் பெரிய தர்காவுக்கு சந்தனக்கூடு கொண்டு வந்து, தர்காவில் வைத்து சிறப்பு தொழுகை நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாகி அரிபுலா ஹுசைன் செய்திருந்தார். ரகுமான் வருகிற தகவலை தர்கா நிர்வாகிகள் ரகசியமாக வைத்திருந்தார்கள். அவர் சதாரண பக்தர் போன்று வந்து பிரார்த்தனை செய்து விட்டு திரும்பினார். கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் ரகுமான் இந்த தர்காவுக்கு வந்துள்ளார்.