பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

வேகமாக வளர்ந்து வரும் பாடலாசிரியர் அருண் பாரதி. ‛அண்ணாத்த' படத்திற்கு இவர் எழுதிய ‛வா சாமி' பாடல் சமீபத்திய ஹிட் பாடல். இப்போது ப்ரீச்சர் நவம்பர் 18 என்ற மலையாள படம் ஒன்றுக்கு பாடல் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: மாநிலம் கடந்து நம் தமிழ் மொழியின் பெருமையை கொண்டு செல்வதில் நானும் ஒரு கருவியாக இருக்கிறேன் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பாடலை ஒரு மணி நேரத்தில் எழுதி முடித்துவிட்டேன் , எழுதும் போது இயக்குநர் மனோஜ் கே வர்க்கீஸ், இசையமைப்பாளர் சுனில்குமார் ஆகியோர் வரிகளில் உள்ள சப்தத்தையும், அர்த்தத்தையும் உணர்ந்து வியந்து பாராட்டினார்கள். அதற்கு நான் நீங்கள் பாராட்ட வேண்டியது என்னையல்ல தமிழ் மொழியை என்று அவர்களுக்கு பதிலளித்தேன்.
இக்கதை கேரளம் மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் நடைபெறும் கதையாக இருப்பதால் முழுக்க முழுக்க தமிழிலேயே இப்பாடலை எழுதியுள்ளேன். எனது சூழலியல் குறித்த " ஈமக்கலயம் " என்னும் கவிதை கேரள அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு 12ம்வகுப்பு சிறப்புத்தமிழ் நூலில் மாணவர்களுக்கு பாடத் திட்டமாக அமைந்துள்ளது. இது ஒரு தமிழ் கவிஞனுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் . என்றார்.




