உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் | வெப் தொடரில் லட்சுமி பிரியா | ஆங்கிலப் படத்தில் இளையராஜாவின் சிம்பொனி | பிளாஷ்பேக் : தமிழ் படத்தில் காட்டு ராணியாக நடித்த பாலிவுட் நடிகை | 'அரசன்' படத்தில் இணைந்த விஜய் சேதுபதி | பிளாஷ்பேக் : பாலச்சந்தரை பயமுறுத்திய நெகட்டிவ் சென்டிமென்ட் | புதிய சாதனை படைக்கத் தவறிய பிரபாஸின் 'ரிபெல் சாப்' பாடல் |

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடித்து தெலுங்கில் தயாராகி தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி டிசம்பர் 17ம் தேதி வெளியான படம் 'புஷ்பா'.
இப்படம் முதல் நாளில் 71 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நேற்றைய வசூலுடன் சேர்த்து இரண்டே நாளில் 116 கோடி வசூலித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார்கள்.
'பாகுபலி 2' படம் தவிர்த்து ஆந்திரா, தெலங்கானாவில் ஒரு தெலுங்குப் படத்தின் இரண்டாவது நாள் வசூலில் 'புஷ்பா' சாதனை படைத்துள்ளது. நேற்று மட்டும் இப்படம் அந்த இரண்டு மாநிலங்களிலும் சுமார் 14 கோடி வசூலித்துள்ளதாம்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இன்றைய வசூல் முதல் நாள் வசூல் அளவிற்கு இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். அடுத்த சில தினங்களில் இப்படம் 150 கோடி வசூலைக் கடந்தால் படம் லாபக் கணக்கில் சென்றுவிடும் என்கிறார்கள்.
ஆந்திராவில் இப்படத்தின் டிக்கெட்டுகள் அரசு நிர்ணயித்த விலைக்கு அதிகமாக விற்கப்படாத காரணத்தால் படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இல்லையென்றால் வசூல் தொகை இன்னும் அதிகமாகியிருக்கும்.
அல்லு அர்ஜுன் எதிர்பார்த்தபடியே இந்தப் படம் அவருக்கு தமிழிலும், ஹிந்தியிலும் புது வியாபாரத்தை ஆரம்பித்து வைத்துள்ளது.